டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் முன்னேறும் - ஷாஹித் அஃப்ரிடி!

Updated: Sat, May 25 2024 20:01 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் மொத்தம் 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இத்தொடருக்காக ஒவ்வொரு அணியும் இத்தொடருக்காக தீவிரமாக தயாராகியும் வருகின்றன.

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கு அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான தூதராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷாகித் அஃப்ரிடியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.

முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் மற்றும் ஜமைக்காவைச் சேர்ந்த ஜாம்பவான் தடகள வீரர் உசைன் போல்ட் ஆகியோர் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் தூதர்களாக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  அந்த வரிசையில் தற்போது பாகிஸ்தானின் ஷாஹித் அஃப்ரிடியும் இணைந்துள்ளார். 

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து பேசியுள்ள ஷாஹித் அஃப்ரிடி, “இந்த உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் உள்ள மைதானங்கள் எங்கள் அணிக்கு ஏற்றது. எங்கள் அணியில் உள்ள சுழற்பந்து வீச்சாளர்களைப் பார்த்தால் அவர்கள் சிறப்பானவர்கள். 

வேகப்பந்து வீச்சு பற்றி நாம் பேசினால், அது ஒரு நம்பமுடியாத தாக்குதல். பேட்டிங்கில் எங்களிடம் பெரிய பலம் உள்ளது. உலகில் எந்த கிரிக்கெட் அணியிலும் இவ்வளவு வலுவான பந்துவீச்சு வரிசை இல்லை என்று நான் நினைக்கிறேன். எங்களுடைய நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும்  அதிக திறமைக் கொண்டவர்கள். அதிலும் வெளியில் அமர்ந்திருக்கும் வீரர்கள் கூட அதிக திறனைக் கொண்ட பந்துவீச்சாளர்களாக உள்ளனர்.

இதுபோன்ற சிறந்த திறமைகளைக் கொண்ட வீரர்கள் உலகத் தரம் வாய்ந்த பேட்டர்களுக்கு எதிராக இந்த உலகக் கோப்பையில் அவர்கள்சிறப்பாக செயல்படுவார்கள். மேலும் அந்த பொறுப்பும் அவர்களுக்கு உள்ளது. ஆனால் எங்கள் அணியில் தற்போது உள்ள ஒரே பிரச்சனை என்னவென்றால் அது பேட்டர்களின் ஸ்டிரைக் ரேட் மட்டும் தான். குறிப்பாக ஏழு முதல் பதின்மூன்று ஓவளுக்கு இடையே அவர்களது ஸ்டிரைக் ரேட் கவலையளிக்கிறது. 

ஆனாலும் எங்கள் அணி வீரர்கள் அதில் தங்களை மேம்படுத்திக்கொள்வார்கள் என நினைக்கிறேன். அதனால் நடப்பு உலகக்கோப்பை தொடரை வெல்வதற்கு பாகிஸ்தான் தற்போது தகுதிவாய்ந்த ஒரு அணி என்பதில் உறுதியாக இருக்கிறேன். அணியில் உள்ள நட்சத்திர வீரர்கள் தங்கள் கடமை சரியாக செய்யும் பட்சத்தில் நிச்சயம் பாகிஸ்தான் அணியானது கோப்பையை வெல்லும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை