டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இலங்கை அணி பதும் நிஷங்கா, வாநிந்து ஹசரங்கா ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

இதில் அதிகபட்சமாக வாநிந்து ஹசரங்கா 71 ரன்களையும், பதும் நிஷங்கா 61 ரன்களைச் சேர்த்தனர். அயர்லாந்து அணி தரப்பில் ஜோஷுவா லிட்டில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து கடின இலக்கை துரத்திய அயர்லாந்து அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் 18.3 ஓவர்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களை மட்டுமே எடுத்தது. இலங்கை அணி தரப்பில் தீக்‌ஷனா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதன்மூலம் இலங்கை அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி, உலகக்கோப்பை சூப்பர் 12-க்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News