டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய சூப்பர் 12 சுற்றில் 5 போட்டிகளில் நான்கு வெற்றியை பெற்று 8 புள்ளிகள் உடன் குரூப்பில் முதலிடத்தில் இருக்கிறது. இதனால் குரூப் 1 இல் இரண்டாவது இடம் பெற்றுள்ள இங்கிலாந்து அணியுடன் அரை இறுதி போட்டியில் மோதுகிறது. இந்திய அணி அரைஇறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கு முழு முக்கிய காரணமாக பேட்டிங்கில் இருந்தது விராட் கோலி மற்றும் சூரியகுமார் இருவரும் தான். இதில் சூரியகுமார் யாதவ் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது.

Advertisement

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனி ஆளாக நின்று 68 ரன்கள், தற்போது ஜிம்பாவே அணிக்கு எதிராக 25 பந்துகளில் 61 ரன்கள் என தொடர்ச்சியாக பல்வேறு சிறந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார். மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் இவர் பந்துகளை அடிப்பதால் இவருக்கு இந்தியன் 360 என்ற மற்றொரு பெயரும் உண்டு.

Advertisement

இந்தியன் 360 என்று அழைக்கப்படுகிறீர்கள், அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என கேட்டதற்கு அவரிடம் நிரூபர்கள் கேட்டதற்கு, “உலகில் 360 என்றால் அது டிவிலியர்ஸ் மட்டுமே. அவரைப் பார்த்து நாங்கள் விளையாடி வருகிறோம். இதில் எந்தவித மாற்று கருத்தும் என்னிடம் இல்லை” என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு பேட்டி அளித்த அவர், “எனது திட்டம் மிகவும் தெளிவாக இருக்கிறது. பயிற்சியின் போது நான் என்னென்ன செய்ய பயிற்சி செய்தேனோ, அதைத்தான் போட்டிகளிலும் செய்தேன். திட்டத்திற்கு ஏற்றவாறு ஆட்டம் அமைந்தது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது.

டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருப்பது செய்த பயிற்சிக்கு கிடைத்த பலனாக நினைக்கிறேன். அதுவும் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஒவ்வொரு போட்டியிலும் பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கிறோம். அது அணிக்கு முக்கியமானதாக அமைந்தால் வேறு என்ன தேவை. அதற்காகத்தான் விளையாடுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News