குல்தீப் யாதவை இந்திய அணி பயன்படுத்த வேண்டும் - ஸ்டீபன் ஃபிளெமிங்!

Updated: Tue, Jun 18 2024 21:29 IST
Image Source: Google

ரோஹித் சர்மா தலைமையில் நடப்பு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியானது லீக் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அதன்படி லீக் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றும், கனடா அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாக கைவிடவும்பட்டது. 

இதன்மூலம் மூன்று வெற்றி மற்றும் ஒரு முடிவில்லை என தோல்வியையே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதையடுத்து இந்திய அணி நாளை மறுநாள் (ஜூன் 20) நடைபெறும் தங்களுடைய முதல் சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இப்போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி அக்ஸர் படேலுக்கு பதிலாக குல்தீப் யாதவை பயன்படுத்த வேண்டும் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அமெரிக்காவில் உள்ள மைதானக்களைப் போல் அல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் உள்ள மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகம் அதிகம் இருக்கும். எனவே இந்திய அணி குல்தீப் யாதவை அணிக்குள் கொண்டு வர வேண்டும்.

ஒரே மாதிரியான வீரர்களை அணியில் வைத்துக்கொண்டு இந்தியா வீணடிக்காது என்று நினைக்கிறேன். ஏனெனில் ஜடேஜா மற்றும் ஆக்ஸர் படேல் ஆகியோர் ஒரே மாதிரியான பந்துவீச்சாளர்கள். அதனால் இதில் அக்ஸர் படேலுக்கு பதிலாக குல்தீப் யாதவை பயன்படுத்தலாம். ஜடேஜா எப்பொழுதுமே ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்டு எதிரணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட கூடியவர். எனவே அவரை இந்திய அணி சிறப்பாக கையாளும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை