துபேவை விட ஹர்திக் பாண்டியாவிற்கு முன்னுரிமை அளிப்பேன் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!

Updated: Sat, Jun 01 2024 16:10 IST
Image Source: Google

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. அந்தவகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இன்று நடைபெறவுள்ள பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. அதேசமயம் ஜூன் 05ஆம் தேதி நடைபெறும் முதல் லீக் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொள்ளவுள்ளது. 

இந்நிலையில் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும், எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும், எந்தெந்த வீரர்கள் போட்டியில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற கருத்து கணிப்புகளை முன்னள் வீரர்கள் கணித்து வருகின்றனர். அதன்படி நடப்பு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஷிவம் தூபேவை காட்டிலும் ஹர்திக் பாண்டியா விளையாடுவதே சிறந்தது என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய மஞ்ச்ரேக்கர், “எனது வாக்கு எப்போதும் ஹர்திக் பாண்டியாவுக்கே செல்லும். அவர் மிகவும் அமைதியான ஐபிஎல்லைக் கொண்டிருந்தார் என்பது எனக்குத் தெரியும், ஆனால் இந்தியா விளையாடிய கடைசி டி20 உலகக் கோப்பையைத் திரும்பிப் பாருங்கள். அடிலெய்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில், ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 60 ரன்களை 190 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடினார்.

அதிலும் இந்திய அணி முதல் 10 ஓவர்களுக்கு 62 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா அப்படி ஒரு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டி20 உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் நீங்கள் சிறந்து விளக்கும் வீரர்களை ஆதரிக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை, ஷிவம் துபே போன்றவர்களை விட ஹர்திக் பாண்டியா அல்லது ரிஷப் பந்த் ஆகியோரைத் தான் நான் பெரிய தொடர்களில் நம்புவேன். ஒருவேளை ஷிவம் தூபே சிறப்பாக செயல்படும் வரை எனது நிலைபாடு இதுதான். 

அதேசமயம் ஹர்திக் பாண்டியா நீங்கள் 5ஆவது பந்துவீச்சாளராக பார்க்க முடியாது. அவர் 6ஆவது பந்துவீச்சு தேர்வாக தான் இந்தியா கொண்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் அவர் பந்துவீச்சு மற்றும் உடற்தகுதியில் சில சிக்கல்கள் உள்ளன. ஏனவே நான் கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரை கொண்டுசெல்ல விரும்புவேன். அதிலும் குறிப்பாக ஒரு சுழற்பந்துவீச்சாளரை தேர்வு செய்யவே விரும்புகிறேன். 

ஏனெனில் இந்திய அணியின் பந்துவீச்சு யுனிட்டைப் பார்க்கும் போது அதிகபடியான வீரர்கள் இல்லை. முகமது ஷமி இந்த தொடரில் விளையாடி இருந்தால் நிச்சயம் அது பந்துவீச்சு யுனிட்டை மொத்தமாக மாற்றியிருக்கும். எனவே, உங்களுக்கு சில நல்ல ஸ்பின்னிங் விருப்பங்கள் கிடைத்தால், நான் கூடுதலாக ஒரு ஸ்பின்னரை களமிறக்க தயங்க மட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை