டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்செய்தது.

Advertisement

அதன்படி அந்த அணிக்கு ஐடன் மார்க்ரம், கேப்டன் டெம்பா பவுமா ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக் ஐடன் மார்க்ரம் 48 ரன்களையும், பவுமா 31 ரன்களையும் சேர்த்தனர். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

அதன்பின் இலக்கை துரத்திய ஆஃப்கானிஸ்தான் அணி தொடக்கம் முதலே எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 

இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக முகமது நபி 34 ரன்களைச் சேர்த்தார்.  தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஷம்ஸி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News