ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த நடப்பு சீசன் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சோஃபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணியானது முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. 

Advertisement

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது மகளிருக்கான புதுப்பிக்கப்பட்ட டி20 தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பெத் மூனி முதலிடத்திலும், தஹ்லியா மெக்ராத் இரண்டாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் 3 ஆம் இடத்திலும் தொடர்கின்றனர். இந்த பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 5ஆம் இடத்தில் தொடர்கிறார். 

Advertisement

அதேசமயம் நியூசிலாந்து அணியின் சூஸி பேட்ஸ் ஒரு இடம் முன்னேறி 7ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க அணியின் அன்னேக் போஷ் 7 இடங்கள் முன்னேறி 13ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கவுர் 11ஆம் இடத்திலும், ஷஃபாலி வர்மா 12ஆம் இடத்திலும் தொடர்வது குறிப்பிடத்தக்கது. 

இதுதவிர்த்து பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் சோஃபி எக்லெஸ்டோன் முதலிடத்திலும், பாகிஸ்தானின் சதியா இக்பால் 2ஆம் இடத்திலும், இந்திய அணியின் தீப்தி சர்மா, ரேனுகா சிங் ஆகியோர் மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர். நடப்பு உலகக்கோக்கை கிரிக்கெட் தொடரில் அபாரமாக செயல்பட்ட அமெலியா கெர் 4 இடங்கள் முன்னேறி 06ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். 

அதேபோல் ஆஸ்திரேலிய அணியின் அனபெல் சதர்லேண்ட் 4 இடங்கள் முன்னேறி 8ஆம் இடத்தையும், பாகிஸ்தானின் நஷ்ரா சந்து ஒரு இடம் முன்னேறி 9ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். மேற்கொண்டு நியூசிலந்தின் ஈடன் கார்சன் இரண்டு இடங்கலும், வெஸ்ட் இண்டீஸின் அஃபி ஃபிளெட்சர் 4 இடங்கலும், ஆஸ்திரேலியாவின் சோஃபி மொலினக்ஸ் 3 இடங்கலும், நியூசிலாந்தின் ரோஸ்மேரி மெய்ர் 10 இடங்கலும் முன்னேற்றம் கண்டுள்ளனர். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் எந்த மாற்றமும் நிகழவில்லை. அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸின் ஹீலி மேத்யூஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் நிலையில், நியூசிலாந்தின் அமெலியா கெர் இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர். இந்த பட்டியலில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா நான்காம் இடத்தில் தொடர்கிறார்.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News