NZW vs PAK, 2nd T20I: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!

Updated: Tue, Dec 05 2023 12:42 IST
Image Source: Google

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20  தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அரிவித்தது. 

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீராங்கனை ஷவால் சுல்ஃபிகர் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த முனீபா அலி - மரூஃப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முனீபா அலி 35 ரன்களிலும், மரூஃப் 21 ரன்களுக்கும் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் நிதான் தாரும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின்னர் களமிறங்கிய அலியா ரியாஸ் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 32 ரன்களைச் சேர்த்த நிலையில் மறுமுனையில் களமிறங்கிய வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை  இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் ஃபரன் ஜோன்ஸ், மொலி பென்ஃபொல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து மகளிர் அணியில் தொடக்க வீராங்கனைகள் பெர்னடைன் 2 ரன்களிலும், சூஸி பேட்ஸ் 18 ரன்களுக்கும், அமிலியா கெர், கேப்டன் சோபி டிவைன், மேடி க்ரீன் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த ஜார்ஜியா பிலிமெர் - ஹன்னா ரோவ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

அதன்பின் ஜார்ஜியா 28 ரன்களுக்கும், ஹன்னா ரோவ் 33 ரன்களுக்கும் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணியின் தோல்வியும் உறுதியானது. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஃபதிமா சனா 3 விக்கெட்டுகளையும், சதியா இக்பால் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் பாகிஸ்தான் மகளிர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை