இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி உள்ளது.

Advertisement

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Advertisement

அதன்பின் ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3ஆவது டி20 போட்டி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு நடக்கிறது.

டி20 உலக கோப்பை தொடர் நடந்த சில தினங்களில் நியூசிலாந்து அணி இந்தியாவில் பயணித்து டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் 164 ரன்களும், இரண்டாவது போட்டியில் 153 ரன்களும் சேர்த்தது. பந்து வீச்சிலும் அந்த அணி வீரர்கள் எந்த நேரத்திலும் சவால் அளிக்கும் வகையில் துல்லியமாக வீசுகின்றனர்.

Advertisement

இன்றைய ஆட்டத்தில் தோற்காமல் ஆறுதல் வெற்றியாவது பெறவேண்டும் என்பதால் நியூசிலாந்து வீரர்கள் போராடுவார்கள். 

இந்தியா சார்பில் கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோரது பேட்டிங் சிறப்பாக உள்ளது. பந்துவீச்சில் அஸ்வின், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் வீசி விக்கெட்களை வீழ்த்தி வருகின்றனர்.

Also Read: T20 World Cup 2021

Advertisement

எனவே, இந்த போட்டியில் வென்று டி20 தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்ற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News