சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி விளையாடும் போட்டிகள்!

Updated: Sat, Aug 10 2024 15:35 IST
Image Source: Google

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் அடுத்த சீசனானது பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதன்படி இந்த் சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு அணியும் இத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக தீவிரமாக தயாராகி வருகின்றன.

மேற்கொண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்னதாக, இத்தொடரில் பங்கேற்று விளையாடவுள்ள 8 அணிகளும் இருதரப்பு தொடர்களில் விளையாடி தங்களை தயார் செய்து வருகின்றன. அதேசமயம் இந்திய அணியோ சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராவதற்கு பதிலாக 2026ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு இப்போதிலிருந்தே தயாராகி வருகிறது போல.

ஏனெனில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி மூன்றே மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறது. அதிலும் அத்தொடரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் நடைபெற இருக்கிறது. ஆனால் இதற்கு அப்படியே நேரெடிராக 12 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. அதேசமயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக என 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

ஆனாலும், ஒருநாள் வடிவில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக இந்திய அணி பெரிதளவில் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை என்பது அணியின் அட்டவணையை பார்க்கும் போதே தெரிவதாக ரசிகர்கள் கூறுகின்றனர். அதேசமயம் இத்தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருப்பதால் இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்றும், அதேசமயம் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்திய அணியின் போட்டி அட்டவணை 2024/25

  • செப்-அக் 2024 - இந்தியா vs வங்கதேசம் - 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள்
  • அக்-நவ 2024 - இந்தியா vs நியூசிலாந்து - 3 டெஸ்ட் போட்டிகள்
  • நவம்பர் 2024 -தென் ஆப்பிரிக்கா vs இந்தியா - 4 டி20 போட்டிகள்
  • நவ- ஜன 2024/25 - ஆஸ்திரேலியா vs இந்தியா - 5 டெஸ்ட் போட்டிகள்
  • ஜன-பிப் - 2025 - இங்கிலாந்து vs இந்தியா - 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை