BAN vs SA: இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் விலகினார் டெம்பா பவுமா!

Updated: Fri, Oct 25 2024 22:16 IST
Image Source: Google

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தாக்காவில் நடந்து முடிந்தது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன, டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இதனையடுத்து வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது எதிவரும் அக்டோபர் 29ஆம் தேதி சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. இதில் வங்கதேச அணி ஏற்கெனவே முதல் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கவுள்ளது. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி தொடரை வெல்லும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. 

இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பர்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 15 பேர் அடங்கிய வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்றைய தினம் அறிவித்துள்ளது.

அதேசமயம் இப்போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் டெம்பா பவுமா விளையாடுவார் என எதிர்பர்க்கப்பட்ட நிலையில், இப்போட்டியில் இருந்தும் அவர் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக  அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது காயமடைந்த டெம்பா பவுமா, மூன்றாவது போட்டியில் பாதியிலேயே வெளியேறினார்.

இந்நிலையில் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத டெம்பா பவுமா, வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்சமயம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்தும் அவர் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாகவும் ஐடன் மார்க்ரம் தொடர்வார் என்பது உறுதியாகியுள்ளது.

வங்கதேச அணி: நஸ்முல் ஹுசைன் சாண்டோ (கேப்டன்), ஷத்மான் இஸ்லாம், மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், மொமினுல் ஹக், முஷ்ஃபிக்கூர் ரஹீம், லிட்டன் தாஸ், ஜாகர் அலி, மெஹெதி ஹசன் மிராஜ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், ஹசன் மஹ்மூத், நஹித் ராணா, ஹசன் முரத், கலீத் அஹ்மத்.

Also Read: Funding To Save Test Cricket

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணி: டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ பிரீட்ஸ்கீ, டெவால்ட் ப்ரீவிஸ், டோனி டி ஸோர்ஸி, கேசவ் மஹராஜ், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, லுங்கி இங்கிடி, டேன் பேட்டர்சன், டேன் பீட், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், கைல் வெர்ரைன்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை