TEX vs LASMatch 15 Dream11 Prediction: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியாலின் மூன்றாம் உள்ளது. அதேசமயம் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி விளையாடிய 4 போட்டிகளில் மூன்று தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 5ஆம் இடத்தில் உள்ளது. இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

TEX vs LAS: Match Details

  • மோதும் அணிகள்- டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் vs லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்
  • இடம் - கிராண்ட் பிரெய்ரி, டல்லாஸ்
  • நேரம் - ஜூன் 25, காலை 5.30 மணி (இந்திய நேரப்படி)

TEX vs LAS: Live Streaming Details

Advertisement

எம்எல்சி கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

TEX vs LAS: Head-to-Head

  • Total Matches: 3
  • Texas Super Kings: 2
  • Los Angeles Knight Riders: 1
  • No Result: 0

Grand Prairie Stadium, Dallas  Pitch Repor

டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் இதுவரை 10 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 4 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 6 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 144 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 197 ரன்கள் உள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

TEX vs LAS: Possible XIs

Texas Super Kings: ஸ்மித் படேல், ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), சைதேஜா முக்கமல்லா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், டொனோவன் ஃபெரீரா, கால்வின் சாவேஜ், மிலிந்த் குமார், ஷுபம் ரஞ்சனே, ஆடம் மில்னே, நூர் அகமது, நந்த்ரே பர்கர்.

Los Angeles Knight Riders: உன்முக்த் சந்த், அலெக்ஸ் ஹேல்ஸ், நிதிஷ் குமார், சைஃப் படார், ரோவ்மேன் பவல், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஆண்ட்ரே ரசல், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஷாட்லி வான் ஷால்க்விக், கார்ன் ட்ரை, தன்வீர் சங்கா.

TEX vs LAS: Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - உன்முக்த் சந்த்
  • பேட்ஸ்மேன்கள் - ஃபாஃப் டு பிளெசிஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், சைதீஜா முக்கல்லம்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஜேசன் ஹோல்டர், மார்கஸ் ஸ்டோய்னிஸ் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ஸல் (துணை கேப்டன்), டோனோவன் ஃபெரீரா
  • பவுலர்கள் - ஆடம் மில்னே, நூர் அகமது.
Advertisement

TEX vs LAS Dream11 Prediction, TEX vs LAS Dream11 Team, Major League Cricket, Fantasy Cricket Tips, MLC 2025, TEX vs LAS Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Texas Super Kings vs Los Angeles Knight Riders

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News