டல்லாஸ்: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் தங்களுடைய 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது. 

Advertisement

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணிக்கு சமித் படேல் மற்றும் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சமித் படேல் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் விளையாடிய டூ பிளெசிஸ் 12 ரன்னிலும், சாய்தேஜா முக்காமல்லா 9 ரன்னிலும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ரன்கள் ஏதுமின்றியும், விக்கெட்டை இழந்தனர். அதன்பின் சமித் படேலுடன் இணைந்த ஷுபம் ரஞ்சனே இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இதில் சமித் படேல் 38 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டோனவன் ஃபெரீராவும் அதிரடியாக விளையாட ஸ்கோரும் உயர்ந்தது. இதில் ஷுபம் ரஞ்சனே அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் ஃபெரீரா 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 43 ரன்களிலும், ஷுபம் ரஞ்சனே 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 70 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது. நைட் ரைடர்ஸ் தரப்பில் வான் ஷால்விக் மற்றும் ஆண்ட்ரே ரஸல் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ஸ் அணிக்கு உன்முக்த் சந்த் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அலெக்ஸ் ஹேல்ஸ் 5 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய நிதீஷ் குமர் ரன்கள் ஏதுமின்றியும், சைப் பதர் 19 ரன்னிலும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 13 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.மேற்கொண்டு நிதானமாக விளையாடி வந்த மற்றொரு தொடக்க வீரர் உன்முக்த் சந்த் 30 ரன்களுடன் ஆட்டமிழந்தர். பின்னர் களமிறங்கிய ரோவ்மன் பாவெல் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோரும் சோபிக்க தவறினர். 

Also Read: LIVE Cricket Score

இறுதியில் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்களையும், வான் ஷால்விக் 13 ரன்களையும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தாலும், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்களை மட்டுமே சேர்த்தது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் அகீல் ஹொசைன், நூர் அஹ்மத் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் சூப்பர் கிங்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News