தி ஹெண்ட்ரெட் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வேல்ஸ் ஃபையர் அணி, ஓவல் இன்விசிபிள் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற வேல்ஸ் ஃபையர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய ஓவல் இன்விசிபிள் அணியில் ஜேசன் ராய் 10 ரன்களிலும், ரொஸ்ஸோவ் 5 ரன்களிலும், சாம் பில்லிங்ஸ் 14 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Advertisement

ஆனாலும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தை வில் ஜேக்ஸ் அரைசதம் கடந்ததுடன், 45 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசி 81 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 100 பந்துகள் முடிவில் ஓவல் இன்விசிபிள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வேல்ஸ் ஃபையர் அணிக்கு ஜோ கிளார்க் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். 

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கிளார்க் 37 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த டாம் பாண்டன் 15, பென் டக்கெட் 25, ஒல்லி போப் 0, டேவிட் மில்லர் 3, ஜோஷ் காப் 11 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் 100 பந்துகள் முடிவில் வேல்ஸ் ஃபையர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஓவல் இன்விசிபிள் அணி தரப்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

Advertisement

இதன்மூலம் ஓவல் இன்விசிபிள் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வேல்ஸ் ஃபையர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News