தி ஹண்ட்ரெட் 2022: தொடரிலிருந்து விலகினார் ஜோஸ் பட்லர்!

Updated: Mon, Aug 22 2022 20:22 IST
The Hundred: Jos Buttler Ruled Out Of The Remainder Of The Tournament Due To Calf Injury (Image Source: Google)

கிரிக்கெட்டின் அடுத்த பரிணாமமாக பார்க்கப்படும் 100 பந்துகளைக் கொண்ட கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அந்நாட்டில் நடத்திவருகிறது. அதன்படி நடைபெற்றுவரும் இத்தொடரில் உலகின் பல முன்னணி வீரர்கள் பங்கேற்று அசத்தி வருகின்றன.

இதில் இங்கிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் ஜோஸ் பட்லர், மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சதர்ன் பிரேவ் அணிக்கெதிரான போட்டியின் போது ஜோஸ் பட்லருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

மேலும் அவரது காயம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகத நிலையில், இனி அவர் நடப்பாண்டு ஹண்ட்ரெட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கமாட்டார் என மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இனி வரும் போட்டிகளில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியின் கேப்டனாக லௌரி எவன்ஸ் செயல்படுவார் என்றும் அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது ஒருபுறமிருக்க வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸலும் நடப்பாண்டு ஹண்ட்ரெட் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார். வெஸ்ட் இண்டீஸின் உள்ளூர் டி20 தொடரான கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்பதற்காக அவர் இம்முடிவை எடுத்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை