ஐபிஎல் 2025: பேட்டர், பந்துவீச்சாளர்களை பாராட்டிய சஞ்சு சாம்சன்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்களைக் குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 67 ரன்களையும், ரியான் பராக் 43 ரன்களையும், கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்களையும் சேர்த்து அசத்தினர். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய லோக்கி ஃபெர்குசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், நேஹால் வதேரா 62 ரன்களையும், கிளென் மேக்ச்வெல் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய சஞ்சு சாம்சன், “பவர்பிளேயில் நாங்கள் தொடங்கிய விதம், நாங்கள் கொஞ்சம் குறைவாகவே ஓடுகிறோம் என்று நினைத்தோம், ஆனால் எங்களிடம் உள்ள பேட்டர்கள் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக நாங்கள் 205 என்ற நல்ல ஸ்கோரை எட்டினோம். எங்களிடம் உள்ள வீரர்கள் இளையவர்கள் என்றாலும், அவர்கள் நாட்டிற்காக நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளனர். அவர்கள் ஆட்டத்தை மிகச் சிறப்பாக சமாளித்து விளையாடுகிறார்கள்.
மேலும் எங்களிடம் ஆர்ச்சர் மற்றும் சந்தீப் சர்மா என மிக ஆபத்தான பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் 150+ வேகத்திலும், மாற்றொருவர் 115+ வேகத்திலும் பந்துவீசும் திறைனைக் கொண்டவர்கள். இதனால் அழுத்தம் நிறைய சூழலில் அவர்கள் சிறப்பாக செயல்படுகிறன்றனர். இருப்பினும் நாங்கள் இன்னிங்ஸை தொடங்கும் முன் சக வீரர்களிடம் எதிரணி குறித்து அதிகம் உறையாடினேன். எனெனில் அவர்கள் ஒரு தரமான அணி என்பது எனக்கு தெரியும்.
Also Read: Funding To Save Test Cricket
அதனால் இந்த ஆட்டத்தை யாரும் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறினேன். ஏனெனில் கடைசி பந்து வீசப்படும் வரை, வெற்றியை நாங்கள் உத்தரவாதம் செய்ய முடியாது. நாங்கள் செயல்பாட்டில் கவனம் செலுத்தினோம், முடிவு தானாகவே சரியாகிவிடும். சிறந்த சேர்க்கை, வரிசைகள் மற்றும் பேட்டிங் ஆர்டர்கள் என்ன என்பதைக் கண்டறிய நாங்கள் எங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டோம்” என்று தெரிவித்துள்ளார்.