கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காஃபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் பாண்டியா, ராகுல் ஆகியோர் பெண்கள் தொடர்பாக கூறிய கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்திய கேப்டன் விராட் கோலி உள்பட பல்வேறு தரப்பினர் பாண்டியா-ராகுலை கடுமையாக கண்டித்தனர். 

Advertisement

சமூகவலைத்தளங்களிலும் இருவரையும் பலர் சாடினர். ஆஸ்திரேலியாவில் இருந்து இருவரையும் நாடு திரும்புமாறு பிசிசிஐ உத்தரவிட்டது. மேலும் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பிறகு, இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரி கடிதம் அளித்தனர். பெண்களைத் தரக்குறைவாக பேசிய விவகாரம் தொடர்பாக இருவருக்கும் தலா ரூ. 20 லட்சம் அபராதம் விதித்து பிசிசிஐ மத்தியஸ்தர் டி.கே. ஜெயின் உத்தரவிட்டார்.

Advertisement

இந்நிலையில் அக்காலகட்டம் பற்றி பேசிய ஹர்திக் பாண்டியா, “எனக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டபோது, என்னைத் தனிப்பட்ட முறையில் தெரிந்த, நான் எப்படிப்பட்டவன் என்பதை அறிந்த பல கிரிக்கெட் வீரர்கள் என்னைப் பற்றி பேசினார்கள். அது பரவாயில்லை. என் கதை முடிந்தது என அவர்கள் நினைத்தார்கள். 

ஹார்திக் பாண்டியாவால் இதைச் சமாளிக்க முடியாது. அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது என பலர் பேசியதைக் கேட்டேன். இந்திய கிரிக்கெட்டின் மோசமான வீரராக அப்போது நான் பார்க்கப்பட்டேன். பெங்களூரில் பயிற்சி எடுத்தபோது மனசு சரியில்லாததால் என்னால் ஒழுங்காக ஷாட் விளையாட முடியவில்லை. 

உங்கள் திறமையில் உங்களுக்குச் சந்தேகம் வந்தால் எல்லாம் தவறாகவே நடக்கும். மிகவும் உணர்வுபூர்வமாக இருந்ததால் அன்று நான் அழுதேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குப் பிறகு நான் தவறாகச் சித்தரிக்கப்பட்டேன். மற்றவர்களை விடுங்கள், என் மீது எனக்கே அதிகமான எதிர்பார்ப்புகள் உண்டு. அச்சமயத்தில் என்னால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தது” என்று தெரிவித்தார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News