இந்த முறையை பின்பற்றி வருங்காலத்தை நோக்கி செல்ல விரும்புகிறோம் - சூர்யகுமார் யாதவ்!

Updated: Mon, Jul 29 2024 13:42 IST
Image Source: Google

இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது குசால் பெரேரா, பதும் நிஷங்கா ஆகியோரது ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்களைச் சேர்த்தது. இதில் குசல் பெரெரா 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 53 ரன்களையும், பதும் நிஷங்கா 32 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்பின் இந்திய அணி இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபடத்து. பின்னர் டக்வொர்த் லூயிஸ் முறைப்படை இந்திய அணிக்கு 8 ஓவர்களீல் 78 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் சஞ்சு சாம்சன் ரன்கள் ஏதுமின் விக்கெட்டை இழக்க, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 30 ரன்களையும், கேப்டன் சூா்யகுமாா் யாதவ் 4 பவுண்டரி ஒரு சிக்ஸச்ர் என 26 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனா்.

இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹா்திக் பாண்டியா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 22 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் இந்திய அணி 6.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரையும் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக ரவி பிஷ்னோய் தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றிகுறித்து பேசிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், “இந்த தொடர் தொடங்கு வதற்கு முன்னரே நாங்கள் எந்த வகையான பிராண்ட் கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பது பற்றி பேசினோம். இலக்கு சிறியதாக இருந்தாலும் நாங்கள் இந்த முறையை பின்பற்றி வருங்காலத்தை நோக்கி செல்ல விரும்புகிறோம். மழை பெய்வதற்கான சூழ்நிலை இருந்த நிலையில் 150 - 160 ரன்களுக்குள் சேசிங் செய்வது நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இதற்கு முன்பு நாம் இங்கு பார்த்த விளையாட்டுகள் எப்போதும் சற்று கடினமாக இருந்ததை பார்த்துள்ளோம். ஆனால் இப்போட்டிக்கு இடையே மழை பெய்தது எங்களுக்கு உதவியாக இருந்தது. எங்கள் வீரர்கள் இப்போட்டியில் பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது. மேலும் அடுத்த போட்டியில் எவ்வாறான பிளெயிங் லெவனை கொண்டு விளையாடுவோம் என்பதை நாங்கள் ஆலோசிக்க வேண்டி உள்ளது.  இப்போட்டியில் எங்கள் அணி செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை