மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களைச் சேர்த்தார். 

Advertisement

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 82 ரன்களையும், விராட் கோலி 36 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறியதால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில்  5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரிஷப் பந்த் 28 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 17 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்துள்ள நிதீஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் அரைசதம் கடந்து அசத்திய வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களுடன் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த நிதீஷ் ரெட்டி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இதன்மூலம் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில்  9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் இந்திய அணி தரப்பில் நிதீஷ் ரெட்டி 105 ரன்களுடனும், முகமது சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலண்ட், பாட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளையும், நாதன் லையன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து 116 ரன்கள் பின் தங்கிய நிலையில் நாளை நான்காம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடரவுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்தது குறித்து நிதீஷ் ரெட்டி சமூகவலைதள பக்கத்தில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “இது உங்களுக்காக அப்பா” என பதிவுசெய்துள்ளார். இத்தொடருக்கு முன்னதாக பிசிசிஐ காணொளி ஒன்றில் பேசிய நிதீஷ் ரெட்டி தனது தந்தை குறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தர். அதில் அவர், “என் தந்தை எனக்காக வேலையை விட்டுவிட்டார். நாங்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சிக்கல்களால் அவர் ஒருமுறை அழுவதை நான் பார்த்தேன்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அது என்னுள் ஏதோ மாற்றத்தை ஏற்படுத்தியது. எனக்காக மட்டுமல்ல, அவருக்காகவும் கிரிக்கெட்டை நான் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உணர்ந்தேன். என் முதல் ஜெர்சியை அவருக்குக் கொடுத்ததும், அவர் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்த்ததும் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அந்த தருணம் எனக்கு மிகப்பெரும் உந்துதலாக அமைந்தது” என்று கூறி இருந்தார். இந்நிலையில் நிதீஷ் ரெட்டியின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News