உலக புகையிலை எதிர்ப்பு தினமான இன்று புகையிலை பயன்பாட்டை குறைக்கவும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், மும்பையில் நடைபெற்ற நிகழ்வில், புகையிலை பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.

Advertisement

அந்நிகழ்வில் தனது வாழ்நாளில் இதுவரை எந்த புகையிலை பொருட்கள், விளம்பரத்திலும் நடித்ததில்லை என கூறிய அவர், ஒரு சுவாரஸ்யமான நிகழ்வொன்றை  பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்வில் பேசிய அவர், தனது பாடசாலை படிப்பை முடித்து இந்திய அணியின் கிரிக்கெட் வீரராக அறிமுகமான சமயத்தில், புகையிலை விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றும், ஆனால் தான் நடிக்க மறுத்துவிட்டதாகவும்  கூறியுள்ளார்.

Advertisement

மேலும் அவரது தந்தையான ரமேஷ் டெண்டுல்கர்  ’நீ நாளைய இளைஞர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும், இது போன்ற புகையிலை பொருட்கள் விளம்பரத்தில் நடித்தால், அதனை பார்த்து உன் ரசிகர்கள் அதற்கு அடிமை ஆவார்கள். எனவே எப்போதும் புகையிலை விளம்பரங்களில் நடிக்க கூடாது’ என சச்சினிடம் கூறியுள்ளார்.

எனவே  தந்தைக்கு அளித்த  வாக்குறுதியை தான் தற்போது வரை காப்பாற்றி வருவதாகவும், பிரபல  சிக்ரெட் நிறுவனத்தின் விளம்பரத்தில்  நடிக்க வாய்ப்பு கிடைத்தும், அதனை புறங்கணித்தாகவும் சச்சின் கூறியுள்ளார்.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News