அறிமுக போட்டியிலேயே அசாத்தலான கேட்ச் பிடித்து அசத்திய திலக் வர்மா - வைரல் காணொளி!

Updated: Thu, Aug 03 2023 22:50 IST
அறிமுக போட்டியிலேயே அசாத்தலான கேட்ச் பிடித்து அசத்திய திலக் வர்மா - வைரல் காணொளி! (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. இதில் இந்திய அணி சார்பாக அதிரடி வீரர் திலக் வர்மா மற்றும் முகேஷ் குமார் இருவரும் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டனர். 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. 4 ஓவர்கள் வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய ஹர்திக் பாண்டியா 5ஆவது ஓவரில் சாஹலை அட்டாக்கில் கொண்டு வந்தார். அவர் வீசிய 5ஆவது ஓவரில் பிரண்டன் கிங் 28 ரன்களும், கைல் மேயர்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து வந்த ஜான்சன் சார்லஸ் குல்தீப் யாதவை அட்டாக் செய்ய நினைத்தார்.

இதனையடுத்து குல்தீப் யாதவ் வீசிய 7.3 பந்தில் சிக்சர் அடிக்க முயன்று பேட்டை சுழற்றினார். ஆனால் பேட்டில் சரியாக படாததால், டீப் மிட் விக்கெட் திசை பக்கம் பறந்தது. அங்கு ஃபீல்டிங் செய்த திலக் வர்மா அந்த கேட்சை அபாரமாக பிடித்து மிரட்டினார். அந்த கேட்சை எடுக்க ஓடி வந்து சரியாக இடத்தில் டைவ் அடித்து கேட்சை பிடித்தார். 

இந்த கேட்சை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜடேஜா ஸ்டைலில் திலக் வர்மா கேட்ச் பிடித்து அசத்தியுள்ளதாக பாராட்டி வருகின்றனர். சிஎஸ்கே அணிக்காக இதுபோல் ஏராளமான கேட்ச்களை ஜடேஜா பிடித்துள்ளார். அதேபோல் அறிமுக போட்டியிலேயே திலக் வர்மா இதுபோன்ற கேட்சை எடுத்துள்ளது ரசிகர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை