SA vs AUS: ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் இடம்பிடித்த டிம் டேவிட்!

Updated: Thu, Aug 31 2023 19:05 IST
SA vs AUS: ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் இடம்பிடித்த டிம் டேவிட்! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி மிட்செல் மார்ஷ், டிம் டேவிட் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 226 ரன்களைக் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

டி20 தொடர் முடிவடைந்த பின் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் பல முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர்.  

இந்நிலையில் டி20 போட்டிகளில் சிறந்த வீரரான ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் அறிமுகமாகவுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிதன் மூலம் இவர் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணி: மிட்செல் மார்ஷ் (கே), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லாபுசாக்னே, தன்வீர் சங்கா, மார்கஸ் ஸ்டோனிஸ் , டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை