சிபிஎல் 2023: ஜமைக்கா தலாவாஸை வீழ்த்தி டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 22ஆவது போட்டியில் டிரின்பாகோ நைட் ரிரைடர் - ஜமைக்கா தலாவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜமைக்கா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜமைக்கா அணியில் கேப்டன் பிராண்டன் கிங் 8 ரன்களுக்கும், அமிர் ஜோங்கோ 13 ரன்களுக்கும், பிளாக்வுட் 29 ரன்களுக்கும், ஷமாரா ப்ரூக்ஸ் 9 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனு திரும்பினர். அதன்பின் களமிறங்கிய இமாத் வாசிம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
ஆனால் மறுபுறம் களமிறங்கிய ஃபாபியன் ஆலன், கிறிஸ் கிரீன் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, அரைசதம கடந்து 62 ரன்களை எடுத்திருந்த இமாத் வாசிமும் விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஜமைக்கா தலாவாஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களைச் சேர்த்தது. நைட் ரைடர்ஸ் தரப்பில் அலி கான் 3 விக்கெட்டுகளையும், சுனில் நரைன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணிக்கு மார்ட்டின் கப்தில் - சுனில் நரைன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் சுனில் நரைன் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 54 ரன்களை எடுத்த நிலையில் பூரன் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் பொல்லார்ட்டும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மார்ட்டின் கப்தில் அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். அவருக்கு துணையாக ஆண்ட்ரே ரஸல் 3 சிக்சர்கள் விளாசி 20 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் ஜமைக்கா தலாவாஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் பேட்டிங், பந்துவீச்சில் பங்களிப்பு செய்த சுனில் நரைன் இப்போட்டியின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.