டிஎன்பிஎல் 2021: ஜெகதீசன் அதிரடியில் சேப்பாக் அணி அசத்தல் வெற்றி!

Updated: Wed, Jul 28 2021 18:59 IST
Image Source: Google

டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதையடுத்து களமிறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஃபெராரியோ 39 ரன்களை எடுத்தார். 

அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கௌசிக் காந்தி ரக் அவுட்டாகி வெளியேறினார். 

இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான ஜெகதீசன் அபரமாக விளையாடி அரைசதம் கடந்தார். அவருடன் இணைந்து விளையாடிய சசிதேவ் 42 ரன்களை சேர்த்தார்.

இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ வீழ்த்தி நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை