டிஎன்பிஎல் 2021 : திருச்சி வாரியர்ஸை வீழ்த்தியது திண்டுக்கல்!

Updated: Tue, Jul 27 2021 23:25 IST
Image Source: Google

டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக ராஜகோபால் 45 ரன்களைச் சேர்த்தார். 

இதையடுத்து இலக்கை துரத்திய திண்டுக்கல் அணிக்கு ஹரி நிஷாந்த் - மோகித் ஹரிஹரன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தது. 

இதன் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த மொகித் ஹரிஹரன் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை