டிஎன்பிஎல் 2021: நெல்லை ராயல் கிங்ஸ் vs ரூபி திருச்சி வாரியர்ஸ்!

Updated: Thu, Jul 22 2021 10:42 IST
TNPL 2021: Nellai Royal Kings Face off Ruby Trichy Warriors today (Image Source: Google)

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் 5ஆவது சீசன் பார்வையாளர்களின்றி நடத்தப்பட்டு வருகிறது. 

கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கிய இத்தொடரில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளும் மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

இந்நிலையில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் பாபா அபாரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், ராஹில் ஷா தலைமையிலான ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இதில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர்கள் முரளி விஜய், அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களினால் இத்தொடரிலிருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

இரு அணிகளிலும் தமிழ்நாடு அணிக்காக விளையாடும் வீரர்கள் இடம்பிடித்துள்ளதால், இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் எதிபார்த்துள்ளனர்.

ஆனால் இதுவரை நடைபெற்ற இரண்டு லீக் ஆட்டங்களுமே மழையால் பாதியில் கைவிடப்பட்டுள்ளதால், இப்போட்டியும் முழுமையாக நடைபெறுமா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

அணி விவரம்

ரூபி திருச்சி வாரியர்ஸ்: ராகுல், ஆகாஷ் சும்ரா, எம்.இ யாழ் அருண் மோழி, எஸ் அனிருதா, எம் பொய்யாமொழி, ரஹில் எஸ் ஷா, எஸ் சந்தோஷ் சிவ், ஆண்டனி தாஸ்,ஆதித்யா கணேஷ், நிதிஷ் எஸ் ராஜகோபால், ஆர் கணேஷ், சுமந்த் ஜெயின், முகமது அட்னான் கான், பி சரவணா குமார், அமித் சாத்விக், ஜி ஹேமந்த் குமார், கே முகுந்த், கார்த்திக் சண்முகம், மதிவனன், கார்த்திக் ஆர், முரளி விஜய்.

நெல்லை ராயல் கிங்ஸ்: எச். திரிலோக் நாக், சி.எச்.ஜிதேந்திர குமார், சஞ்சய் யாதவ் ஆர், வி அதிசயராஜ் டேவிட்சன், டி அஜித் குமார், எம் அபிநவ், என்.எஸ்.ஹரீஷ்,பிரதோஷ் ரஞ்சன் பால், எஸ்.சருண் குமார், பாபா இந்திரஜித், பாபா அபராஜித், அஸ்வத் முகுந்தன், எல் சூர்யப் பிரகாஷ், எஸ்.செந்தில் நாதன், ஜிதேந்திர குமார் சி.எச்., ரோஹித் ராம் ஆர், சத்ராஜ் ஏ, வீரமணி டி, ஸ்ரீ நெரஞ்சன் ஆர், விவேக் ஆர், சுரேஷ் சி, அர்ஜுன் பி மூர்த்தி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை