டிஎன்பிஎல் 2021: நெல்லை அணிக்கு 121 ரன்கள் இலக்கு!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 23ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற ஸ்பார்டன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய சேலம் அணியில் விஜய் சங்கர் - அபிஷேக் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது.
இதில் அபிஷேக் 25 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விஜய் சங்கரும் 41 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்கள் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை மட்டுமே சேர்த்தது.
நெல்லை அணி தரப்பில் அபாரஜித், அதிசயராஜ், ஹரிஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.