டிஎன்பிஎல் 2021: மதுரையை வீழ்த்தியது சேலம்!

Updated: Sat, Aug 07 2021 23:13 IST
Image Source: Google

டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சேலம் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய சேலம் அணி விஜய் சங்கர், முருகன் அஸ்வின் ஆகியோரது அதிரடியான் ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களைச் சேர்த்தது . இதில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 47 ரன்களையும், முருகன் அஸ்வின் 30 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மதுரை அணி தொடக்கத்திலேயே அருண் கார்த்திக், சுஜிந்திரன் ஆகியோரது விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

பின் களமிறங்கிய அனிருத் சிதா ராம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். 52 ரன்கள் எடுத்திருந்த சிதா ராம் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்களும் சேலம் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன் மூலம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை