டிஎன்பிஎல் 2023: காட்டடி அடித்த அபாரஜித்; நெல்லைக்கு 160 ரன்கள் இலக்கு!

Updated: Sat, Jun 24 2023 16:58 IST
TNPL 2023: Chepauk Super Gillies post a total of 159 on their 20 overs! (Image Source: Google)

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் 6 சீசன்களை கடந்து தற்போது 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 14ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

சேலத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் பிரதோஷ் பால் 2 ரன்களிலும், நாராயண் ஜெகதீசன் 15 ரன்களுக்கும், சஞ்சய் யாதவ் 15 ரன்களுக்கும், லோகேஷ் ராய் ஒரு ரன்னிலும் என வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். 

இதில் மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் பாபா அபாரஜித் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டதுடன் அரைசதத்தையும் பதிவுசெய்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபாரஜித் 5 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் என 79 ரன்களைக் குவித்து விக்கெட்டை இழந்தார். 

இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களைச் சேர்த்தது. நெல்லை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பொய்யாமொழி 3 விக்கெட்டுகளையும், லக்‌ஷய் ஜெய்ன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை