டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 8ஆவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய மதுரை அணிக்கு கார்த்திக் - ஹரி நிஷாந்த் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கார்த்திக் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஹரி நிஷாந்துடன் இணைந்த ஜேகதீசன் கௌஷிக் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

Advertisement

பின் 24 ரன்களில் ஹரி நிஷந்த் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேகதீசன் கௌஷிக் 45 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து வந்த வாஷிங்டன் சுந்தரும் 12 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

பின்னர் களமிறங்கிய ஸ்வப்நைல் சிங், தீபன் லிங்கேஷ், சுதன், முருகன் அஸ்வின், ஸ்ரீ அபிஷேக், தேவ் ராகுல் என அடுதடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் 19.3 ஓவர்களில் மதுரை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் சரவண குமார், சுபோத் பாட்டி தலா 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 124 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கவுள்ளது.  
  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News