டிஎன்பிஎல் 2023: சுஜய் அதிரடியில் அடுத்த வெற்றியைப் பதிவுசெய்த கோவை!

Updated: Thu, Jun 22 2023 12:10 IST
Image Source: Google

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டுவரும் டிஎன்பிஎல் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸை எதிர்த்து திருச்சி அணி பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி திருச்சி அணியின் தொடக்க வீரர்காக களமிறங்கிய கங்கா ஸ்ரீதர் ராஜூ அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய ஸ்ரீநிவாசன், மணி பாராதி, ஃபெராரியோ ஆகியோரு அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி மணிமாரன் சித்தார்த் பந்துவீச்சில் அடுத்தது விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜாஃபர் ஜமால் 22, எஸ்பி வினோத் ஒரு ரன்னுடனும் என அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த கங்கா ஸ்ரீதர் ராஜுவும் 58 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.  இறுதில் ராஜ்குமார் 31 ரன்களைச் சேர்த்து அணிக்கு உதவினார். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்களை மட்டுமே எடுத்தது. கோவை அணி தரப்பில் சித்தார்த் 3 விக்கெட்டுகளையும், ஷாருக் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கோவை அணிக்கு சுஜய் - சுரேஷ் குமார் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் சுரேஷ் குமார் 9 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் சாய் சுதர்சன் 7 ரன்களுக்கும், ராம் அரவிந்த் 2 ரன்களுக்கும், முகிலேஷ் 9 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏம்மாற்றமளித்தனர். 

இருப்பினும் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த சுஜய் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 72 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் கோவை அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை