டிஎன்பிஎல் 2023: சன்னி சந்து அரைசதம்; திருப்பூருக்கு 156 டார்கெட்!

Updated: Sat, Jul 01 2023 17:06 IST
Image Source: Google

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 22ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியின் தொடகக் வீரர்கள் கௌசிக் காந்தி ரன்கள் ஏதுமின்றியும், அரவிந்த் ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் கவினும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

இதையடுத்து களமிறங்கிய சன்னி சந்து அதிரடியாக விளையாட மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இருப்பினும் அதிரடியை கைவிடாத சன்னி சந்து அரைசதம் கடந்து அசத்தினார். 

பின் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 61 ரன்கள் எடுத்திருந்த சன்னி சந்துவும் விக்கெட்டை இழக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடுவில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

திருப்பூர் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வரன் 3 விக்கெட்டுகளையும், நக், சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி விளையாடவுள்ளது, 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை