ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அணியானது இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. 

Advertisement

இந்நிலையில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்த்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சூப்பர் கில்லீஸ் அணிக்கு சந்தோஷ் குமார் - ஜெகதீசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சந்தோஷ் குமார் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜெகதீசனுடன் இணைந்த பாபா அபாரஜித் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

அதன்பின் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜெகதீசன் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பிரதோஷ் ரஞ்சன் பால் 19 ரன்களுக்கும், டேரில் ஃபெரேரியோ 4 ரன்களிலும், ஆண்ட்ரே சித்தார்த் 7 ரன்களிலும் என அடித்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். ஆனால் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் பாபா அபாராஜித் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், அணியை வலிமையான ஸ்கோரை நோக்கியும் அழைத்துச் சென்றார். அவருக்கு துணையாக விளையாடிய அபிஷேக் தன்வரும் அதிரடியாக விளையாடினார். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் பாபா அபாரஜித் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 72 ரன்களையும், அபிஷேக் தனவர் 3 சிக்ஸர்களுடன் 22 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விளையாடவுள்ளது.

 
 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News