தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பில்) தொடரின் 9ஆவது சீசன் நோற்று முதல் தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின, கோவையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதனப்டி களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணியில் தொடக்க வீரர் அமித் சாத்விக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ராஜ்குமாரும் 14 ரன்களை மட்டுமே சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த துஷார் ரஹேஜா - பிரதோஷ் பால் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். இதில் ரஹேஜா அரைசதம் கடந்த நிலையில், பிரதோஷ் பால் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 38 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சசிதேவ் 7 ரன்களுக்கும், முகமது அலி 12 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துஷார் ரஹேஜாவும் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் என 79 ரன்களை சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைச் சேர்த்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் அபிஷேக் தன்வர் மற்றும் விஜய் ஷங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பிரேம் குமார், லோகேஷ் ராஜ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சூப்பர் கில்லீஸ் அணியில் தொடக்க வீரர் ஆஷிக் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மோஹித் ஹரிஹரன் மற்றும் கேப்டன் பாபா அபாரஜித் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த மோஹித் ஹரிஹரன் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 46 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் அபாரஜித்துடன் ஜோடி சேர்ந்த விஜய் ஷங்கரும் அதிரடியாக விளையாட ஸ்கோரும் உயர்ந்தது. 

Also Read: LIVE Cricket Score

இதில் அபாரஜித் தனது அரைசததைப் பூர்த்தி செய்தார். மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பாபா அபாரஜித் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 77 ரன்களையும், விஜய் ஷங்கர் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 41 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 16 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபா அபாரஜித் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News