சேலம்: டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் லோகேஷ் ராஜின் அபாரமான பந்துவீச்சின் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

Advertisement

டிஎன்பில் தொடரின் 9அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சேலத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை வென்ற திண்டுக்கல் அணி பந்துவீசுவதாக அறிவிக்க, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சூப்பர் கில்லிஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் மோஹித் ஹரிஹரன் 4 ரன்னிலும், ஆசிக் 14 ரன்னிலும், ஜெகதீசன் 11 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

பின்னர் இணைந்த கேப்டன் அபாரஜித் - விஜய் ஷங்கர் இணை அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதில் விஜய் ஷங்கர் 26 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய அபாரஜித்தும் 56 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் சுனில் கிருஷ்ணா அதிரடியாக விளையாடி 32 ரன்களைச் சேர்க்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஷிவம் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷிவம் சிங் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் அஸ்வினுடன் இணைந்த பாபா இந்திரஜித்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இருவரும் அபாரமாக விளையாடியதுடன் தங்களுடைய அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்ததன் காரணமாக டிராகன்ஸ் அணி எளிதாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. 

Also Read: LIVE Cricket Score

ஆனால் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 67 ரன்களில் அஸ்வினும், 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 73 ரன்களில் இந்திரஜித்தும் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை மட்டுமே சேர்த்தது. சூப்பர் கில்லீஸ் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய லோகேஷ் ராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News