திருநெல்வேலி: மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜ்குமாரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

Advertisement

மதுரை பாந்தர்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் லீக் போட்டி இன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மதுரை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பாலச்சந்தர் அனிருத் 7 ரன்னிலும், அஜய் சேட்டன் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் சதுர்வேத் 4 ரன்னிலும், ராம் அரவிந்த் 14 ரன்னிலும், முருகன் அஸ்வின் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழக்க, அந்த அணி 29 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

பின்னர் இணைந்த ஆதீக் உர் ர்ஹ்மான் மற்றும் சரத் குமார் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஆதிக் உர் ரஹ்மான் 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சரத் குமார் 37 ரன்கலையும், குர்ஜப்நீத் சிங் 17 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழப்பிற்கு 131 ரன்களைச் சேர்த்தது. திருச்சி தரப்பில் ஈஸ்வரன், அதிசயராஜ், சரவண குமார் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய திருச்சி அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அந்த அணியில் சுரேஷ் குமார் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் விளையாடிய வசீம் அஹ்மத், சுஜய் சிவசங்கரன், ஜெகதீசன் கௌஷிக், சஞ்சய் யாதவ், முகிலேஷ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் அரைசதத்தை நெருங்கிய சுரேஷ் குமாரும் 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் அந்த அணி 97 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் ஜோடி சேர்ந்த ராஜ்குமார் மற்றும் ஜாஃபர் ஜமால் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராஜ்குமார் 37 ரன்களையும், ஜாஃபர் ஜமால் 17 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுரேஷ் குமார் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Also Read: LIVE Cricket Score

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News