இங்கிலாந்து தொடரில் இருந்து விலகினார் டோனி டி ஸோர்ஸி!
South Africa Cricket: தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டோனி டி ஸோர்ஸி காயம் காரணமாக இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்திலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி தொடரை வெல்லும். அதேசமயம் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும் என்ற சூழலிலும் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி பின்னடைவை சந்தித்துள்ளது.
அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டோனி டி ஸோர்ஸி காயம் காரணமாக இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிராக லீட்ஸில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியின் போது டோனி டி ஸோர்ஸி காயத்தை சந்தித்தார். இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனை முடிவில் காயத்தின் தீவிரம் அதிகரித்துள்ளது.
மேலும் அவரது காயம் குணமடைய சில காலம் தேவைப்படும் என்பதால், இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இருந்து விலகியதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இருப்பினும் அவருக்கான மாற்று வீரர்கள் யாரையும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியில் மேத்யூ பிரீட்ஸ்கி சேர்க்கப்பட்டுள்ளார்.
England 2nd ODI Playing XI: ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல், வில் ஜாக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், சாகிப் மஹ்மூத்
Also Read: LIVE Cricket Score
South Africa 2nd ODI Playing XI: ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், டெம்பா பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் ப்ரெவிஸ், சேனுரன் முத்துசாமி, கார்பின் போஷ், கேசவ் மகாராஜ், நந்த்ரே பர்கர், லுங்கி இங்கிடி.