ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: டி வில்லியர்ஸ் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் வார்னர்!

Updated: Thu, May 30 2024 20:16 IST
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: டி வில்லியர்ஸ் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் வார்னர்! (Image Source: Google)

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

இதனைத்தொடர்ந்து இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நடப்பு டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் மிகப்பெரும் சாதனை ஒன்றையும் முறியடிக்க வாய்ப்புள்ளது. அந்தவகையில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக கேட்சுகளை பிடித்த வீரராக தென் ஆப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் உள்ளார். 

அதன்படி டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிகாக 23 கேட்சுகளை பிடித்து முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் 21 கேட்சுகளை பிடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரிலும் டேவிட் வார்னர் விளையாடவுள்ள நிலையில், இத்தொடரில் மேற்கொண்டு மூன்று கேட்சுகளை பிடித்தா, டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கேட்சுகளை பிடித்த வீரர் எனும் சாதனையை படைப்பார். 

மேலும் இப்பட்டியலில் நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில் 19 கேட்சுகளை பிடித்து மூன்றாம் இடத்தில் உள்ளார். அதேசமயம் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 16 கேட்சுகளை பிடித்து நான்காம் இடத்திலும், நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 15 கேட்சுகளுடன் 5ஆம் இடத்திலும் தொடர்கின்றனர். 

டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக கேட்சுகளை பிடித்த வீரர்கள்

  • ஏபி டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) - 23 கேட்சுகள் (25 இன்னிங்ஸ்)
  • டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) - 21 கேட்சுகள் (34 இன்னிங்ஸ்)
  • மார்ட்டின் கப்தில் (நியூசிலாந்து) - 19 கேட்சுகள் (28 இன்னிங்ஸ்)
  • கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) - 16 கேட்சுகள் (24 இன்னிங்ஸ்)
  • ரோஹித் சர்மா (இந்தியா) - 16 கேட்சுகள் (36 இன்னிங்ஸ்)
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை