சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வீரர்களை கொண்டு நடத்தப்படும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில் தோயம் ஹைதராபாத் மற்றும் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு ஹாமில்டன் மஸகட்ஸா - மார்ட்டின் கப்தில் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அதிரடியாக விளையாடியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இதில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 21 ரன்களை எடுத்திருந்த நிலையில் மார்ட்டின் கப்தில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 16 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் மஸகட்ஸாவும் தனது விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேதர் ஜாதவ் 15 ரன்களில் நடையைக் கட்ட, பின்னர் இணைந்த கோஸ்வாமி மற்றும் சிராக் காந்தி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிராக் காந்தி ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சிக்கும்புராவும் முதல் பந்தில் சிக்ஸரை விளாசிய நிலையில் அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

இறுப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி 37 ரன்களைச் சேர்த்து அணிக்கு, ஃபினிஷிங்க்கை கொடுத்தார். இதன்மூலம் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களைச் சேர்த்தது. ஹைதராபாத் தரப்பில் சுதீப் தியாகி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணிக்கு ஜார்ஜ் வொர்க்கர் - பீட்டர் ட்ரெகோ இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் ஜார்ஜ் 19 ரன்களுக்கும், பீட்டர் 13 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷுவ்காந்த் சுக்லாவும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த குர்கீரத் சிங் - ரவி ஜாங்கித் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 32 ரன்களை எடுத்த நிலையில் குர்கீரத் சிங் தனது விக்கெட்டை இழந்தர். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

ஆனாலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவி ஜாங்கித் 42 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய சமியுல்லா ஷின்வாரி 17 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் தோயம் ஹைதராபாத அணியானது 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News