ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நேற்று சௌத்தாம்ப்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் மேத்யூ ஷார்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். 

Advertisement

இதில் தொடக்கத்தில் தடுமாறிய டிராவிஸ் ஹெட், அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசி 19 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின்னர் 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 59 ரன்களைச் சேர்த்த நிலையில் டிராவிஸ் ஹெட் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மிட்செல் மார்ஷ் 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த மேத்யூ ஷார்ட் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மேத்யூ ஷார்ட் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 41 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவருக்கு துணையாக விளையாடி வந்த ஜோஷ் இங்கிலிஸ் 37 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 10 ரன்களிலும், டிம் டேவிட் ரன்கள் ஏதுமின்றியும், கேமரூன் க்ரீன் 13 ரன்களுக்கும், சீன் அபோட் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஸேவியர் பார்ட்லெட் மற்றும் ஆடம் ஸாம்பா ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

இதனால் 19.3 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய லியாம் லிவிங்ஸ்டோன் 3 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் சாகிப் மஹ்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்கல் வில் ஜேக்ஸ் 6 ரன்களுக்கும், கேப்டன் பில் சால்ட் 20 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் இணைந்த ஜோர்டன் காக்ஸ் - லியாம் லிவிங்ஸ்டோன் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் ஜோர்டன் காக்ஸ் 17 ரன்களுக்கும், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லிவிங்ஸ்டோன் 37 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய ஜேக்கம் பெத்தேல், சாம் கரண், ஜேமி ஓவர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர் உள்ளிட்டோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஆதில் ரஷித், சாகீப் மஹ்மூத் ஆகியோராலும் ரன்களைச் சேர்க்க முடியவில்லை. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதனால் இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சீன் அபோட் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகித்துள்ளது. மேலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்திய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News