மகளிர் அண்டர்19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோலா லம்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து யு19 மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய யு19 மகளிர் அணியை பந்துவீச அழைத்தது. 

Advertisement

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு டேவினா பெர்ரின் - ஜெமிமா ஸ்பென்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டேனினா பெர்ரின் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய ஜெமிமா ஸ்பென்ஸ் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ட்ரூடி ஜான்சனும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் பெர்ரினுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் அபி நோர்குரோவ் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.

Advertisement

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டெவினா பெர்ரின் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 45 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், அவருடன் சேர்ந்து விளையாடி வந்த அபி நோர்குரோவும் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் அமு சுரேன்குமார் 14 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இங்கிலாந்து யு19 அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் பருணிகா சிசோடியா, வைஷ்ணவி சர்மா ஆகியோர் தலா 3 ரன்களுக்கு விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஜி கமலினி - கோங்கடி த்ரிஷா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கோங்கடி த்ரிஷா 35 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் கமலினியுடன் இணைந்த சானிகா சல்கே நிதானமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். 

இப்போட்டியில் அபாரமாக விளையாடிய கமலினி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கமலினி 8 பவுண்டரிகளுடன் 56 ரன்களையும், சனிகா சல்கே 11 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய யு19 மகளிர் அணி 15 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து யு19 அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் யு19 டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் இந்திய அணி முன்னேறி அசத்தியுள்ளது.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இன்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News