அயர்லாந்து - ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று இறுதிப் போட்டி இன்று அல் அம்ரீட்டில் நடைபெற்று வருகிறது.
Advertisement
இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் பால் ஸ்டிர்லிங், மெக்பிரையன், கரெத் டெலானி என நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
அடுத்து களமிறங்கிய ஹேரி டெக்டர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அரைசதம் கடந்தார். பின் அரைசதம் கடந்த கையோடி ஹேரி டெக்டரும் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களும் தடுமாறினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்களை மட்டுமே சேர்த்தது. யுஏஇ அணி தரப்பில் ஸஹூர் கான், முஸ்தஃபா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.