ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய யுஏஇ அணிக்கு கேப்டன் முகமது வாசீம் - ஆர்யன் லக்ரா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது வாசீம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 53 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய அரவிந்த் 2, பசில் ஹமீத் 5, தனிஷ் சுரி 11, அலி நாசர் 6, ஆர்யன் கான் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், மறுபக்கம் அரைசதம் கடந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆர்யன் லக்ரா 3 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசி 63 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் யுஏஇ அணி 7 விக்கெட்டுகளை இழந்து166 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு வழக்கம் போல் ஹஸ்ரதுல்லா ஸஸாய் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் 21 ரன்கள் எடுத்திருந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹஸ்ரதுல்லா ஸஸாய் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து வந்த கேப்டன் இப்ராஹிம் ஸத்ரான் 4 ரன்களுக்கும், நஜிபுல்லா ஸத்ரான் 12 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தார். அதன்பின் அனுபவ வீரர் முகமது நபி ஒருமுனையில் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினாலும், மறுபக்கம் காளமிறங்கிய ரசூலி, அஸ்மதுல்லா ஒமர்ஸாய், கைஸ் அஹ்மத், நூர் அஹ்மத், நவீன் உல் ஹக் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

இருப்பினும் அணியின்  வெற்றிக்காக இறுதிவரை போராடிய முகமது நபி 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. யுஏஇ அணி தரப்பில் அலி நாசர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் யுஏஇ அணி 11 ரன்கள் வித்தியாசத்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தியதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளது.  

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News