ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று துபாயில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற அமீரக அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் சபிர், மெஹிதி ஹசன், லிட்டன் தாஸ், யாசிர் அலி என முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். ஆனாலும் அஃபிஃப் ஹொசைன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், அரைசதம் கடந்தும் அசத்தினார்.

Advertisement

அவருக்கு துணையாக விளையாடிய நூருல் ஹசனும் 35 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை துரத்திய ஐக்கிய அரபு அமீரக அணியில் முகமது வாசீம் 15 ரன்களிலும், கிரேக் சூரி 39 ரன்களிலும், ஆர்யன் லக்ரா 19, வித்யா அரவிந்த் 16 ரன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

பின்னர் களமிறங்கிய வீரர்களும் வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதனால் 19.4 ஓவர்களில் ஐக்கிய அரபு அமீரக அணி அனைத்து விக்கெட்டுகளையும், 151 ரன்களை மட்டுமேச் சேர்த்தனர். இதன்மூலம் வங்கதேச அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்று அசத்தினர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News