ஐக்கிய அரபு அமீரக அணியில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. 

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று துபாயில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செய்ஃபெர்ட் - சாத் பௌஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் டிம் செய்ஃபெர்ட் 7 ரன்களிலும், மிட்செல் சாண்ட்னர் ஒரு ரன்னிலும், தனே கிளெவர் ரன்கல் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாத் பௌஸும் 21 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் களமிறங்கிய மார்க் சாப்மேன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, மார்க் சாப்மேன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 63 ரன்கள் எடுத்த நிலையில் மார்க் சாப்மேனும் விக்கெட்டை இழக்க, 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்தது. யுஏஇ தரப்பில் அயான் அஃப்சல் கான் 3 விக்கெட்டுகளையும், முகமது ஜவதுல்லா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய யுஏஇ அணியில் தொடக்க வீரர் ஆர்யான்ஸ் சர்மா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த முகமது வசீம் - விருத்தியா அரவிந்த் இணை அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தனர். பின் அரவிந்த் 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் முகமது வசீம் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 54 ரன்கள் எடுத்த நிலையில் வசீமும் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய ஆசிஃப் கான் - பசில் ஹமீத் இணை ஜோடி சேர்ந்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆசிஃப் கான் 5 பவுண்டரி ஒரு சிக்சர் என 48 ரன்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் யுஏஇ அணி 15.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன்மூலம் யுஏஇ அணி 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை சமன்செய்தது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News