IND vs SA: உமேஷ், ஸ்ரேயாஸ், ஷபாஸ் இந்திய அணியில் சேர்ப்பு!

Updated: Wed, Sep 28 2022 13:23 IST
Umesh Yadav, Shreyas Iyer and Shahbaz Ahmed added to India’s squad (Image Source: Google)

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில்  முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர் தீபக் ஹூடா இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல். ஆஸ்திரேலிய தொடரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்.

அதே போல் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் விளையாடவில்லை. அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் ரிப்போர்ட் செய்ய வேண்டி உள்ள காரணத்தால் இதில் பங்கேற்கவில்லை. 

மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முகமது ஷமியும் இன்னும் குணமடையாத காரணத்தால் அவரால் இத்தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர்களுக்கு மாற்றாக உமேஷ் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், சபாஷ் அஹ்மத் ஆகியோர் தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ஷாபாஸ் அகமது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை