அனைத்து அணிகளுக்கும் ஒரே விதியை நடுவர்கள் பின்பற்ற வேண்டும் - ரோஹித் சர்மா!

Updated: Sun, Nov 03 2024 22:49 IST
Image Source: Google

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் நியூசிலாந்து அணியானது 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிசெய்து அசத்தியது. 

இதன்மூலாம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணியானது 3-0 என்ற கணக்கில் வென்றதுடன், இந்திய அணியை சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் ரிஷப் பந்திற்கு மூன்றாம் நடுவர் வழங்கிய தீர்ப்பானது தற்சமயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் 147 ரன்கள் என்ற இலக்கை விட்டிய இந்திய அணி இப்போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அச்சமயத்தில் ரிஷப் பந்த் மட்டும் தானி ஆளாக அபாரமாக விளையாடி அணியின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதில் அவர், 64 ரன்கள் எடுத்திருந்த போது அஜாஸ் படேல் பந்துவீச்சில் டாம் பிளெண்டலிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். ஆனால் இதற்கு நடுவர் அவுட் வழங்கவில்லை. அதன்பின் நியூசிலாந்து அணி வீரர்கள் ரிவிவ்யூ எடுத்து மூன்றாம் நடுவரிடம் மேல் முறையீடு செய்தனர்.

அதன்படி மூன்றாம் நடுவர் பரிசோதனையில் ரிஷப் பந்த் பேட்டில் பந்து பட்டதற்கான துல்லியமான அறிகுறி ஏதுமில்லை. பந்து பேட்டை நெருங்கும்போது அல்ட்ரா எட்ஜில் சிறிய அதிர்வு காணப்பட்டதை வைத்து மூன்றாம் நடுவரும் அவுட் என்ற தீர்ப்பை வழங்கினார். ஆனால் அந்த நேரத்தில் பந்து பேட்டில் பட்டதா இல்லையா என்பதை கண்டறிய ஹாட் ஸ்பாட் தொழில்நுட்பம் இல்லை என்பதால், ரிஷப் பந்த் அதிருப்தியுடன் வெளியேறினார். இது சர்ச்சையையும் ஏற்படுத்தி விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. 

இந்நிலையில் மூன்றாம் நடுவர் தீர்ப்பு குறித்து பேசியுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “நடுவரின் அந்த முடிவைப் பற்றி, சத்தியமாக, என்ன கூறுவது என்று எனக்குத் தெரியாது. நாம் ஏதாவது சொன்னால், அது ஏற்றுக்கொள்ளவும் படாது, ஆனால் உள்ளடக்கிய ஆதாரம் இருந்தால், அது கள நடுவரின் முடிவோடு நிற்க வேண்டும். அதுதான் எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனல், நடுவர் அவுட் கொடுக்காத சமயத்தில் மூன்றாம் நடுவர் அந்த முடிவை எப்படி எடுத்தார் என்பது எனக்கு தெரியவில்லை.

உங்களுக்கு தெரியும், பேட் தெளிவாக பேடிற்கு அருகில் இருந்தது. எனவே மீண்டும், நான் அதுகுறித்து பேசுவது சரியான விஷயமாக இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. இதுகுறித்து நடுவர்கள் நிச்சயம் சிந்திக்க வேண்டும். அதேசமயம் அனைத்து அணிகளுக்கும் ஒரே விதியை அவர்கள் பின்பற்ற வேண்டும். ஆனால் மாறாக தங்கள் மனதிற்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டிருக்க வேண்டாம். ரிஷப் பந்தின் விக்கெட்டானது எங்கள் பார்வையில் மிக மிக முக்கியமானது.

 

Also Read: Funding To Save Test Cricket

ஏனெனில் அவர் அந்த நேரத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்ததுடன், எங்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லவும் முயற்சி செய்துவந்தார். ஆனால் அவர் துரதிர்ஷ்டவசமாக விக்கெட்டை இழந்ததன் காரணமாக நாங்கள் இப்போட்டியில் தோல்வியைத் தழுவினோம்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த சர்ச்சை குறித்து முன்னாள் வீரர்கள் ஏபி டி வில்லியஸ், வாசீம் ஜாஃபர் உள்ளிட்டோரும் தங்கள் கருத்துகளை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை