டெஸ்ட் கிரிக்கெட்டில் உம்ரான் மாலிக்கை சேர்க்கக்கூடாது - இஷாந்த் சர்மா!

Updated: Sat, Jul 15 2023 22:09 IST
டெஸ்ட் கிரிக்கெட்டில் உம்ரான் மாலிக்கை சேர்க்கக்கூடாது - இஷாந்த் சர்மா! (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்களைச் சேர்த்ததுடன், ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தியுள்ளார். 

இந்த நிலையில் ஜெய்ஸ்வாலை பாராட்டியுள்ள இஷாந்த் சர்மா, “வெஸ்ட் இண்டீஸ் எதிராக அவர் விளையாட இன்னிங்ஸை பார்த்தீர்கள் என்றால் அவர் அடித்த பௌண்டர்களின் எல்லாமே தரமான ஷாட் ஆக இருந்தது. குறிப்பாக புதிய பந்துக்கு எதிராக அவர் ஆடிய விதம் அனைத்துமே டாப் கிளாஸ். ஜெய்ஸ்வால் புதிய பந்தில் கவர் டிரைவர் ஆடாமல் ரன்களை சேர்த்தார். அது நிச்சயம் நல்ல பழக்கம் என நினைக்கிறேன். 

ஏனெனில் நீங்கள் கவர் டிரைவ் ஆடினால் ஸ்லிப் கேட்ச் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக புல் ஷாட்டுகளை வைத்து ஜெய்ஸ்வால் ரன் அடிக்க முயற்சி செய்தார். ஒரு நல்ல தொடக்க வீரருக்கு என்னென்ன தகுதி இருக்க வேண்டுமோ அது ஜெய்ஸ்வாலிடம் இருக்கிறது. பந்தை நன்றாகவும் தடுக்கவும் செய்கிறார். அடித்தும் ஆடுகிறார். இதனால் ஜெய்ஸ்வால் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக வர அனைத்து தகுதியுமே இருக்கிறது. 

இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக பந்து வீசுகிறார் என்பதற்காக காஷ்மீர் வீரர் உம்ரான் மாலிக்கை சேர்க்கக்கூடாது. வேகம் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் போதாது. உம்ரான் மாலிக் ரஞ்சிப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும். வேகமாக பந்து வீசுகிறார் என்பதற்காக நீங்கள் உம்ரான் மாலிக்கை இந்திய அணிகள் சேர்த்தால் அது ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் மற்ற வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும்.

இதனால் உம்ரான் மாலிக் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட இன்னும் தயாராகவில்லை என்று நான் நினைக்கிறேன். விராட் கோலி ஆட்டமும் சிறப்பானதாகவே அமைந்தது. அவர் எப்போதுமே சாமை விட்டு செல்லவில்லை அவருடைய பென்ஞ் மார்க் அதிகமாக இருப்பதால் அவர் பார்ம் அவுட் ஆகிவிட்டார் என நினைக்கத் தோன்றும்” என கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை