NZ vs ENG: இரு புதுமுக வீரர்களை களமிறக்கும் இங்கிலாந்து!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 2ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இதையடுத்து கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, இங்கிலாந்திற்கு சென்று தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான 15 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக நட்சத்திர வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இடம்பெறவில்லை.
அதேசமயம் இத்தொடரில் அறிமுக வீரர்கள் ஜேம்ஸ் பிரேசி, ஒல்லி ராபின்சன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி: ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜேம்ஸ் பிரேசி, ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜாக் கிரௌலி, பென் ஃபோக்ஸ், டான் லாரன்ஸ், ஜாக் லீச், கிரேக் ஓவர்டன், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், டோமினிக் சிபிலி, ஒல்லி ஸ்டோன், மார்க் வூட்.