ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்றைய தினம் அறிவித்துள்ளது. இதில் வழக்கமான கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இத்தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படவுள்ளார். மேற்கொண்டு இந்திய டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டிற்கும் இந்த தொடரில் இடம்பிடிக்கவில்லை. அதேசமயம் இந்திய தொடரில் சோபிக்க தவறிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்கும் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. தனஞ்செயா டி சில்வா தலைமையிலான இந்த அணியில் லஹிரு உதாரா மற்றும் சோனல் தினுஷா உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் பதும் நிஷங்கா, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் காயம் குறித்த அச்சம் இருக்கும் நிலையிலும் இந்த டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில் பதும் நிஷங்கா இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக விளையாடுவது சந்தேகம் என்றாலும், இந்த டெஸ்ட் அணியில் அவருக்கு தேர்வாளர்கள் வாய்ப்பு வழங்கியுள்ளனர். மேற்கொண்டு இந்த அணியில் தினேஷ் சண்டிமால், ஏஞ்சலோ மேத்யூஸ், திமுத் கருணரத்னே ஆகிய அனுபவ வீரர்களுடன் கமிந்து மெண்டிஸ், ஜெஃப்ரி வண்டர்சே, பிரபாத் ஜெயசூரியா உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கை டெஸ்ட் அணி: தனஞ்சய டி சில்வா (கேப்டன்), திமுத் கருணாரத்ன, பாதும் நிஸ்ஸங்க, ஓஷத பெர்னாண்டோ, லஹிரு உதாரா, தினேஷ் சண்டிமல், ஏஞ்சலோ மேத்யூஸ், கமிந்து மெண்டிஸ், குசால் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சோனல் தினுஷா, பிரபாத் ஜெயசூரியா, ஜெஃப்ரி வான்டர்சே, நிஷான் பீரிஸ், அசிதா பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார, மிலன் ரத்நாயக்க.
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கன்னொலி, ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மேத்யூ குஹ்னெமன், மார்னஸ் லபுஷாக்னே, நாதன் லையன், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்ஃபி, மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.